பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர்கள் குழாம் அறிவிப்பு…!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர்கள் குழாம் அறிவிப்பு…!

அடுத்துவரவுள்ள பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முழுமையான தொடருக்கான பயிற்சியாளர் குழாமை PCB அறிவித்துள்ளது.

மிஸ்பாஹ் உல் ஹக், வக்கார் யூனுஸ் ஆகியோர் முன்னர் வகித்த பதவிகளை உலக கிண்ண T20 போட்டிகளுக்கு முன்னதாக பதவியை துறந்து விலகிக்கொண்டனர்.

அதனால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே PCB இடைக்கால அடிப்படையில் பயிற்சியாளர்களை நியமித்து வருகின்றது. இதனடிப்படையில் சக்லைன் முஸ்தாக் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் பந்துவீச்சுப்பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் ஷான் டெய்ட் , துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் மொஹமட் யூசுப் ஆகியோர் அடுத்துவரவுள்ள 12 மாதங்களுக்கு பணியில் தொடரவுள்ளனர்.

அவுஸ்திரேலிய தொடர் வருகின்ற மார்ச் 4 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.