பாகிஸ்தானில் இடம்பெற்றுவந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் பங்கேற்ற பாவாத் அஹமெட் எனும் அவுஸ்திரேலிய வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
முடிவுகளில் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டதை அடுத்து பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 22 ம் திகதிவரை அட்டவணைப்படுத்தப்பட்ட போட்டிகளில் இதுவரை 14 போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.