பாகிஸ்தான் செல்லமறுக்கும் தமிழக வீர்ர் ஶ்ரீதரன் ஶ்ரீராம்- மாற்று தேடும் ஆஸி…!

 

ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் அவைஸ்ரளலிய அணியுடன் பாகிஸ்தான் சுற்றுலா செல்லமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன??

இதனால் கிரிக்கட் அவுஸ்ரேலியா நியூசிலாந்தின் முன்னாள் தலைவர் டேனியல் வெட்டோரியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது, தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அவர் ஆஸி. முகாமில் சேர்வது சாத்தியமில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தசாப்தத்தில் முதல் முறையாக ஒரு சிறப்பு சுழல் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி, துணைக் கண்டத்திற்கு (Subcontinent) ஒரு டெஸ்ட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

2016 முதல் சுழல் பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர் என பல பாத்திரங்களை ஏற்ற தமிழகத்தின் ஸ்ரீதரன் ஸ்ரீராம், பாகிஸ்தானுக்கு ஆஸி அணியுடன் செல்லமாட்டார் என்பது அந்த அணிக்கு பின்னடைவுதான்.

ஆஸ்திரேலிய அணி, அவர்களின் துணைப் பணியாளர்களில் நிபுணத்துவம் இல்லாமல் உலகின் ஆசிய துணைக்கண்டத்துக்கு கடைசியாகச் சென்றது மோசமான 2013 இந்திய சுற்றுப்பயணமாக அமைந்தது, அங்கு அவர்கள் 4-0 வித்தியாசத்தில் டெஸ்ட் தொடரை இழந்தனர்.

பாகிஸ்தான் அணியுடனான தொடர் மார்ச் 4 ம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 5 ம் திகதிவரை இடம்பெறவுள்ளது.