பாகிஸ்தான் ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்தார் அசார் அலி- சொதப்பியது பாகிஸ்தான்…!

பாகிஸ்தான் ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்தார் அசார் அலி- சொதப்பியது பாகிஸ்தான்…!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 11 ரன்களை சேர்த்துள்ளது.

முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலிய அணி இன்றைய நாள் நிறைவில் ஒட்டுமொத்தமாய் 134 ரன்ஸ்களால் முன்னிலையில் காணப்படுகின்றது.

தமது முதல் இன்னிங்சில் ஆடிய பாகிஸ்தான் அணி இறுதி 7 விக்கெட்டுக்களையும் வெறுமனே 20 ரன்களில் இழந்தது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்சில் 268 ரன்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பில் அப்த்துல்லா சாபிக், அசார் அலி, அணித்தலைவர் பாபர் அசாம் ஆகியோர் அரைசதமடித்தனர். இன்றைய போட்டியில் அசார் அலி 7000 டெஸ்ட் ரன்களை பெற்றவர்கள் பட்டியலில் இணைந்தார்.

ஜாவேத் மியான்தத்
இன்சமாம்-உல்-ஹக்
முகமது யூசுப்
யூனிஸ் கான்
ஆகியோரை அடுத்து அசார் அலியும் இணைத்துக்கொண்டார்.
7000 டெஸ்ட் ரன்களை கடந்த ஐந்தாவது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஆனார் அசார் அலி! ?