பாகிஸ்தான் கிரிக்கெட் அணினுடைய சகலதுறை ஆட்டக்காரர்கள் இமாத் வசீம் தன்னுடைய ஓய்வு அறிவித்தலை மீள பெற்றுக்கொண்டு மீண்டும் தேசிய குழாத்துக்கு திரும்ப உள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவருடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் இமாத் வசீம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளார் .
அண்மையில் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் மிகச் சிறப்பாக இமாத் வசீம் செயற்பட்டு தனது அணிக்கு கிண்ணம் பெற்று கொடுத்திருந்தார் என்பதும் ஞாபகப்படுத்ததக்கது.
இந்த நிலையிலேயே இமாத் வசிம் மீண்டும் தேசிய கிரிக்கெட் அணிக்குள் நுழையவிருக்கிறார்.