பாகிஸ்தான் தேர்வாளரை நீக்க வேண்டும் -வலுக்கும் கோரிக்கை..!

பாகிஸ்தானின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான சாதிக் முகமது, ஆசியக் கோப்பை தோல்வியைத் தொடர்ந்து, முகமது வசீமை தலைமைத் தேர்வாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை (PCB) வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் 2022 ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக இறுதிப் போட்டியில் மோசமான செயல்பாடுகளால் அவர்கள் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றனர்.

இந்த தோல்விக்குப் பின்னர் தேர்வுக் குழுவை மாற்றுவதற்கான சரியான நேரம் என்றும் குறிப்பாக முகமது வசீமை நீக்க வேண்டும் என்று உள்ளூர் ஊடகம் ஒன்றில் பேசிய சாதிக் கூறினார்.

பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து சாதிக் பல்வேறு கவலைகளை எழுப்பினார், மேலும் அணியில் அதிக ஆதரவு (Favourism) இருப்பதாகக் கூறினார்.

“ஆசிப் அலி மற்றும் இப்திகார் அகமட் எங்கள் தலைமை தேர்வாளரின் விருப்பமானவர்கள் என்று தெரிகிறது. அவர்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்றாலும், அனைத்து வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கும் அவர்கள் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நல்ல ஓய்வில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று சாதிக் கூறினார்.

சர்வதேச அரங்கில் அவர்களை உயர்த்துவதற்கு அவர்களின் திறமை போதாது என்றும் அவர் கூறினார்.

“இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் கிளப் தரத்தில் உள்ளனர், மேலும் அவர்கள் உள்நாட்டு பிராந்திய அணிகளுக்கு கூட தேர்ந்தெடுக்கப்படக்கூடாது, ஏனெனில் இது வரவிருக்கும் தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவதை இழக்கச் செய்யும் என்றும் சாதிக் கூறினார்.

எமது YouTube தளத்துக்கு செல்வதற்கு 👇