பாகிஸ்தான் பந்துவிச்சாளருக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய தோனி

பாகிஸ்தான் பந்துவிச்சாளருக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமானவர் மகேந்திர சிங் தோனி.

கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அதன்படி கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு கோப்பையை வென்றும் கொடுத்தார்.

இந்நிலையில் மகேந்திர சிங் தோனி தனது சிஎஸ்கே ஜெர்சியை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூஃபிற்கு பரிசாக வழங்கியுள்ளார்.

 

இதனை ஹாரிஸ் ராவூஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “லெஜண்ட் & கேப்டன் கூல் எம் எஸ் தோனி எனக்கு அவருடைய சட்டையை பரிசாக அளித்து கௌரவித்துள்ளார். 7″ இன்னும் அவரது வகையான மற்றும் நல்லெண்ண சைகைகள் மூலம் பலரது இதயங்களை வென்று வருகிறது” என பதிவிட்டுள்ளார்.

தற்போது ஹாரிஸ் ராவூஃப் பதிவிட்டுள்ள இப்பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#Abdh

Previous articleஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு
Next articleஓய்வுபெறும் இலங்கை வீரர்களுக்கு திடீர் கட்டுப்பாடுகள் விதிப்பு…!