பாகிஸ்தான் புறப்படப்போகும் _கெயில்.- பரபரப்பு ட்வீட் என்ன சம்பவம் ?
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான தொடர் திடீரென ரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் பாதுகாப்பு சிக்கல் இருக்கிறது என்பதை காரணம் காட்டி நியூசிலாந்து கிரிக்கெட் சபை போட்டி ஆரம்பமாவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ,தொடரை ரத்து செய்த நிகழ்வு இடம்பெற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும், பாகிஸ்தான் கிரிக்கெட் சார்ந்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிகழ்வாக இந்த நிகழ்வு பார்க்கபடுகிறது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து கொன்று விட்டது என பகிரங்கமாக நியூஸிலாந்தை குற்றம் சாட்டினார்.
இப்படியிருக்க மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஜாம்பவான், ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணியில் இணைந்து விளையாடும் கிறிஸ் கெயில் ஒரு பரபரப்பு டுவீட் இட்டிருக்கிறார்.
‘நான் நாளை பாகிஸ்தான் புறப்படுகிறேன், யாரெல்லாம் என்னோடு வருகிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.
இதன் மூலமாக பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இல்லை என்பதையும், பாகிஸ்தானில் சென்று கிரிக்கெட் விளையாடுவது யாருக்கும் சிக்கல் இல்லை என்கின்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார் கெயில்.
கெயில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளிலும் விளையாடி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.