பாகிஸ்தான் முன்னாள் தேர்வாளர் மீது குற்றம் சுமத்திய வஹாப் ரியாஸ்…!

பாகிஸ்தானின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், முன்னாள் பிசிபி தலைவர் ரமிஸ் ராஜா மற்றும் தலைமை தேர்வாளர் முகமது வாசிம் ஆகியோரின் பதவிக்காலத்தில் நிகழ்ந்த பிரச்சினை குறித்து பேசியுள்ளார்.

உள்ளூர் ஊடக செய்தி சேனலுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், வஹாப் ரியாஸ் முன்னாள் பிரதம தேர்வாளர் வாசிமின் தேர்வு செயல்முறையை விமர்சித்தார்.

மற்றும் மூத்த கிரிக்கெட் வீரர்களான இமாத் வாசிம், சோயிப் மாலிக் மற்றும் சர்ஃபராஸ் அகமது போன்றவர்களை அவர் ஓரங்கட்டினார்்என குறிப்பிட்டார்.

“2021 டி20 உலகக் கோப்பையில் ஷோயப் மற்றும் இமாத் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களது செயல்திறன் ஏன் அவரது லேப்டாப்பில் வரவில்லை? ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை 2022க்கு அவர்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டார்கள்? அவர்களின் தவறு என்ன?” என்று 37 வயதான வாஹாப் கேள்வி எழுப்பியுள்ளார்.

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇