பாகிஸ்தான் வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட இங்கிலாந்து கவுன்டி அணியின் தலைமைத்துவம்..!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷான் மசூத் 2023 சீசனுக்கான இங்கிலாந்தின் யார்க்ஷயர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், அவர் கவுண்டியின் வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

புதனன்று ஹெடிங்லியில் க்ளூசெஸ்டர்ஷையரிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து யார்க்ஷயர் தலைமை பயிற்சியாளர் ஓடிஸ் கிப்சன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த ஆண்டு கவுன்டி போட்டிகளில் அற்பதமான இன்னிங்ஸ்கள் ஆடி நல்ல ஓட்டக்குவிப்பை மேற்கொண்ட மசூத்துக்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.