பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த தன்வந்துக்கு பரிசு..!

கடந்த 2024/03/01 அன்று பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஹரிகரன் தன்வந்தைக் கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கம் ஓர் இலட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிக் கௌரவித்தது.

கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத் தலைவர் க.இரகுநாதன் அவர்களும் அதன் காப்பாளரும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவருமாகிய சண்முகம் குகதாசன் அவர்களும் இவற்றை வழங்கினர்.

2024/03/20 ஆம் நாளாகிய இன்று திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் மாணவர் ஒன்றுகூடலின் பொழுது இந்தக் கௌரவிப்பு நிகழ்ச்சி நடபெற்றது.

கல்லூரி முதல்வர், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தன்வந்தின் பெற்றோர் உள்ளடக்கிய பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பொழுது உரை ஆற்றிய சண்முகம் குகதாசன் அவர்கள் இச்சாதனை புரிந்த மாணவன் நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்திருப்பதாகவும் மென் மேலும் முன்னேறி ஒலிம்பிக் வரை செல்ல வேண்டும் எனவும் வாழ்த்தினார்.