பாக்கு நீரிணையை மிகக் குறைந்த வயதில் வேகமாக கடந்து சாதனை படைத்தார் தன்வந்த்.

பாக்கு நீரிணையை மிகக் குறைந்த வயதில் வேகமாக கடந்து சாதனை படைத்தார் தன்வந்த்.

திருகோணமலையை சேர்ந்த 13 வயது மாணவன் ஹரிகரன் தன்வந்த் 01.03.2024 திகதி இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் இடையான பாக்கு நீரிணையை 09.32 மணித்தியாலயத்தில் நீந்தி இலங்கையில் வேகமாக கடந்து முடித்த சாதனையை படைத்தார்.

இதற்கு முன் தனது பயிற்றுவிப்பாளர் ஆன ரொசான் அபயசுந்தர 09.58 மணி நேரத்திரல் கடந்த சாதனையை முறையடித்தமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் 01 அதிகாலை 12.05 க்கு தனுஷ்கோடியில் தொடங்க இருந்த சாதனைப் பயணம் கடல் கொந்தளிப்பு காரணமாக காலை 04.15 க்கு ஆரம்பமாகி தலைமன்னார் பியர் எனும் இடத்தை மாலை 13.47 மணியளவில் சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கல்விகற்கும் மாணவன் தன்வந்த். இலங்கையில் இருந்து பாக்கு நீரிணையை கடந்த 6 வது நபராகவும், மிகக் குறைந்த வயதில் பாக்கு நீரிணையை கடந்தவராகவும் சாதனை படைத்துள்ளார்.

4 வருடங்களுக்கு மேல் நீச்சல் பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர், அடுத்த இலக்காக நீண்ட தூர நீச்சல் பயணங்களில் ஈடுபடதல் தனது இலக்காக கொண்டுள்ளார்.

நீச்சல் பயணம் பசுமையான பூமி மற்றும் கடல் பொக்கிசங்களை பாதுகாத்தல் என்ற மையக்கருவை கொண்டு Trinco Aid தொண்டு நிறுவனம் Palk Strait Swimming Record Challenge தலைப்பில் ஒழுங்கமைத்தது. இந்த பயணத்தின் நீண்ட கால இலக்குகளாக பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவணையை கடுப்படுத்தல், கடல் வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்களை பாதுகாத்தல், கடல் மாசுபாட்டை கட்டுப்படுத்தல், இளைஞர்களிடத்து நீச்சல் போட்டிகளை ஆதரித்தல், பசுமையை ஆதரித்தல், உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம், எதிர்மறை தாக்கங்களில் இருந்து இளைஞர்களை பாதுகாத்தல் மற்றும் போதை பாவனையை எதிர்த்தல் ஆகியன அமைகிறது.

ஈடு இணையற்ற விடாமுயற்சியை வெளிப்படுத்திய தன்வந்துக்கு இந்த சாதனைக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

“பசுமையான பூமி மற்றும் கடல் பொக்கிசங்களை பாதுகாத்தல்”

R.K.M. Sri Koneswara Hindu College Trincomalee

#palkstrait2024 #palkstraitchallenge #Trincoaid #Act4SDGs #Thanvanth #SDG #success #Palkstrait #swimming #Trinco #Trincomalee