பாடசாலைகள் கால்பந்தாட்டம்; விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 30

பாடசாலைகள் கால்பந்தாட்டம்; விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 30

மாவட்ட மட்டத்திலான பாடசாலை அணிகளுக்கு இடையில் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் ஈடுபட்டுள்ளது.

முதல் கட்டமாக 14 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையில் மாவட்ட மட்டத்தில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பாடசாலை அணிகள் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம் என சங்கம் அறிவித்துள்ளது.

இவ் வருடம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இருந்து பெருமளவிலான பாடசாலைகள் விண்ணப்பிக்கும் என எதிர்பார்ப்பதாக இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் தெரிவித்தது.

சங்கத்தில் பதிவு செய்யவேண்டிய மற்றும் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய இறுதி திகதி 2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியாகும். எனவே 14 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை நிரப்பி அனுப்பலாம்.

N.S.B. Dissanayake,
General Secretary,
Sri Lanka Schools’ Football Assosiation,
Passara Central College,
Passara

என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்குமாறு பாடசாலை அதிபர்கள் கோரப்படுகின்றனர்.

விண்ணப்பக் கட்டணம் அறவிடப்படும்.

மேலதிக விபரங்களுக்கு 070 7010555 அல்லது 077 7127222 என்ற தொலைபேசி இலக்கங்களில் செயலாளரை தொடர்புகொள்ளவும்.

via -Metro News