பாடசாலை கால கிரிக்கெட் என ரோகித் சர்மாவின் தலைமைத்துவத்தை குறிப்பிட்ட பிரக்ஜன் ஓஜா …!

பாடசாலை கால கிரிக்கெட் என ரோகித் சர்மாவின் தலைமைத்துவத்தை குறிப்பிட்ட பிரக்ஜன் ஓஜா …!

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது .

நேற்று அகமதாபாத்தில் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

ரோகித் சர்மா நிரந்தர தலைவராக ,ஒருநாள் போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற முதல் தொடரிலேயே இந்தியா அற்புதமான வெற்றியை தனதாக்கியது .

மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொண்டாலும்கூட, பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் பாராட்டதக்கத விதமாய் அமைந்தது .

இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஓஜா, ரோகித் சர்மா குறித்து தன்னுடைய கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார் .

குறிப்பாக பாடசாலை காலத்தில் நாங்கள் பந்து வீசுகின்ற போது எங்கள் கேப்டன் எப்படி எங்களை உற்சாகப்படுத்தி சிறப்பாக விக்கெட்டுகளை கைப்பற்ற உதவுவாரோ அதே மாதிரியான ஒரு பாங்கை நேற்று எல்லா பந்துவீச்சாளர்களையும் ரோகித் கையாண்டதை  காணக்கூடியதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்ஸ்மன், ரோகித் சர்மா மிகச்சிறந்த கிரிக்கெட் அறிவுடையவர் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.