பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய ஶ்ரீலங்கா கிரிக்கட் புதிய திட்டம்.
பாடசாலை மட்டத்தில் இருக்கின்ற திறமையான வீரர்களை நாடளாவிய ரீதியில் அடையாளப்படுத்தி தேசிய கிரிக்கெட்டிற்கு கொண்டு வரும் நோக்கத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு அருமையான திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அதன் ஒரு அங்கமாக நேற்றைய நாளில் 12 மாகாண கிரிக்கெட் இணைப்பாளர்கள் என்கின்ற அடிப்படையில் 12 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .
வட மாகாணம், கிழக்கு மாகாணம் மத்திய மாகாணம் இப்படி ஒன்பது மாகாணங்களில் இருந்தும் வீரர்களை தேர்வு செய்வதற்காக 12 ‘பாடசாலை மாகாண இணைப்பாளர்கள்’ என்று ஒரு பதவியை வழங்கி வைத்துள்ளது.
இனி வரும் காலங்களில் இவர்கள் பாடசாலைகளில் காணப்படும் திறமையான வீரர்களை அடையாளப்படுத்தி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் மூலமாக தேசிய கிரிக்கெட் அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதே இதன் பிரதான நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தின் இணைப்பாளராக கஜீபன் நியமிக்கப்பட்டுள்ளார்