பாண்டோரா பேப்பர்ஸ் -முறைகேடான நிதி முதலீடு ,சச்சின் பெயரும் உள்ளடக்கம் ..!

முறைகேடான நிதி முதலீடு – சச்சின் பெயரும் உள்ளடக்கம் ..!

கறுப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்த ஆவணங்களை பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முன்னாள் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான 3 மாதங்களில் விர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனத்தை கலைக்கும்படி சச்சின் கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இப்போதைய நிலையில் உலகின் முக்கிய பேசுபொருளாக இருக்கும் இந்த விவகாரத்தில் பல அரசியல் தலைவர்கள் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், சச்சின் பெயர் உள்ளடக்கமும் ரசிகர்களை அதிகம் சிந்திக்க வைத்துள்ளது.

இதில் எந்தளவு தூரம் உண்மை உள்ளது என தெரியவராவிட்டாலும் சச்சின் பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளமை முக்கியமானது.
இந்த பட்டியலில் இந்தியா தரப்பில் 6 பேரும், பாகிஸ்தானை சேர்ந்த 7 பேரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.