பாண்ட் அதிரடி, கோஹ்லி மீண்டும் ஏமாற்றம்,மொஹாலி டெஸ்ட்டில் வலுவான நிலையில் இந்தியா…!

பாண்ட் அதிரடி, கோஹ்லி மீண்டும் ஏமாற்றம்,மொஹாலி டெஸ்ட்டில் வலுவான நிலையில் இந்தியா…!

இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மொஹாலி டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

போட்டியின் முதல் நாளில் இந்திய விக்கெட் காப்பாளர் பாண்ட் அதிரடி நிகழ்த்த இந்திய அணி வலுவான நிலையில் காணப்படுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரோஹித் சர்மா முதலில் துடுப்பாட விருப்பம் தெரிவித்தார், அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி இன்றைய முதல் நாள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 366 ஓட்டங்களை பெற்றது.

தனது 100 வது டெஸ்ட்டில் விளையாடும் கோஹ்லி இன்றும் ஏமாற்றினார். எம்புல்தெனியாவின் பந்துவீச்சில் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார், ஆயினும் தொடர்ந்து பாண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் 6 வது விக்கெட்டில் சத இணைப்பாட்டம் புரிய இந்திய அணி 366 ஓட்டங்களைக் குவித்தது.

பந்துவீச்சில் எம்புல்தெனிய 2 விக்கெட்டுகக்ளையும் , லக்மால், விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

நாளை 2 ம் நாள் ஆட்டம் தொடரும்.