பாதுகாவலரை காயப்படுத்திய ரொனால்டோ- சாம்பியன்ஸ் லீக்கில் பரபரப்பு..!
கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த கால்பந்து திருவிழாவான சாம்பியனர லீக் கால்பந்தாட்ட போட்டிகள் இன்று ஆரம்பித்தன.
இந்த போட்டிகளில் மிக முக்கியமான முதலாவது ஆட்டம் யங் போய்ஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைட்டட் அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெற்றது.
யுனைடெட் பெர்னில் உள்ள வான்க்டார்ஃப் மைதானத்தில் சுவிஸ் அணியான யங் பாய்ஸை இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைட்டட் எதிர்கொண்டது.
இந்தப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் Warm-up செய்து கொண்டிருந்த நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அடித்த பந்தொன்று மைதானத்திற்கு வெளியில் இருந்து செக்யூரிட்டி ஒருவரை தாக்கியது.
உடனடியாக நிலைகுலைந்து போயிருந்த செக்யூரிட்டி கீழே விழுந்தார், இதனைக் கண்ணுற்ற ரொனால்டோ ஓடிப்போய் அவரை நலம் விசாரித்து அவர் சுகமானதை உறுதிப்படுத்திய பின்னரே மீண்டும் மைதானத்துக்கு திரும்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே ரொனால்டோ அடித்த பந்து ஒன்று செக்யூரிட்டியை காயப்படுத்தி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.