பானுக்கவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- விரைந்து வருகிறார்..!
இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) நடத்திய உடற்தகுதி தேர்வில் இலங்கை அணியின் அதிரடி வீரர் பானுக ராஜபக்சே தேர்ச்சி பெற்று அணித்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளார்.
உடற்தகுதி தேர்வுக்கு உட்படுத்தப்படாததால் தனது ஓய்வை ரத்து செய்த போதிலும், பானுகா ராஜபக்ச ஆஸ்திரேலியாவில் டி20 தொடரை தவறவிட்டார்.
SLC நிர்ணயித்த புதிய உடற்தகுதி தரநிலைகளை அடைவதற்கு அதிகாரிகளிடம் பானுகா மேலும் கால அவகாசம் கோரியிருந்தார்.
இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான T20I தொடருக்கான தேர்வுக்கு பானுகா ராஜபக்ச இப்போது தகுதி பெற்றுள்ளார் என்று SLC மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“இந்திய தொடருக்கான அணியில் அவர் இடம் பெறுவாரா என்பதை தேர்வுக்குழுவினர் முடிவு செய்ய வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஐபிஎல் ஏலத்தில் 50 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் பானுகா ராஜபக்சே தனது முதல் ஐபிஎல் ஒப்பந்தத்தையும் நேற்று பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகமொத்தத்தில் பானுகவின் ரசிகர்களுக்கு தொடர்ச்சியான மகிழ்வுக்குரிய செய்திகளே கிடைத்துக் கொண்டிருக்கின்றன.