பானுக்கவை ஏன் அவுஸ்திரேலிய தொடரில் சேர்க்கவில்லை- SLC கொடுத்திருக்கும் விளக்கம் என்ன தெரியுமா ?

பானுக்கவை ஏன் அவுஸ்திரேலிய தொடரில் சேர்க்கவில்லை- SLC கொடுத்திருக்கும் விளக்கம் என்ன தெரியுமா ?

எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ச ஏன் தெரிவு செய்யப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) தெளிவுபடுத்தியுள்ளது.

பானுக ராஜபக்ச இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த தேவையான உடற்தகுதி பரிசோதனைகளை இன்னும் மேற்கொள்ளவில்லை என SLC சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய தொடரைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணிக்கு திரும்புவதை இலக்காகக் கொண்டு பானுக உடற்தகுதி சோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், டெஸ்ட் போட்டிகளை விட T20I உடன் தொடரை தொடங்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் CEO ஆஷ்லி டி சில்வா ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.

தொடரின் தற்போதைய அட்டவணையின்படி, பிப்ரவரி இறுதியில் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஆஸ்திரேலியாவில் T20 தொடரை முடித்துவிட்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுடனான T20 தொடருக்கு நேராக செல்வதற்காக T20 தொடரை மாற்றியமைக்குமாறு இந்தியாவிடம் கோரப்பட்டுள்ளதாக ஆஷ்லே டி சில்வா கூறினார்.

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக கூறியுள்ள SLC, இது தொடர்பான அறிவிப்பை இந்தியா விரைவில் வெளியிடும் என நம்புவதாக தெரிவித்துள்ளது.