பானுக அணிக்கு வேண்டும்- ஶ்ரீ லங்கா கிரிக்கட் முன்பாக ஆர்ப்பாட்டம்…! (படங்கள்)

கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இலங்கையின் துடுப்பாட்ட வீரர் பானுக்க ராஐபக்ஸவை எதிர்வரும் இந்தியா அணியுடனான தொடரின் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளுமாறு கோரி இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

நேற்றைய நாளில் அறிவிக்கப்பட்ட இலங்கையின் 18 பேர் கொண்ட T20 குழாமில் பானுக ராஜபக்சே இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

உடற்தகுதியை சரியான முறையில் பேண தவறினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இறுதி நேரத்தில் ராஜபக்ச அணியில் இருந்து ஓரம்கட்டபட்டார்.

இலங்கையின் சிறந்த அதிரடி வீரரான ராஜபக்சவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வேண்டுமென்றே அவரை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியே ரசிகர்கள் ஏராளமானவர்கள் பானுக்க அணிக்கு வேண்டும் என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் ?