இந்திய, மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4 வதும் இறுதியான டெஸ்ட் போட்டியின் 2 ம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்றைய நாள் நிறைவில் 7 விக்கெட்டை இழந்து இந்திய அணி 294 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஒட்டு மொத்தத்தில் 3 விக்கெட்டுக்கள் கையிருப்பில் இருக்க இந்திய அணி 89 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
போட்டியில் ஒரு கட்டத்தில் இந்தியா தடுமாறினாலும், இளம் வீரர்கள் பான்ட் மற்றும் சுந்தர் இணைந்து இந்தியாவுக்கு சத இணைப்பாட்டம் புரிந்து அணியைக் காப்பாற்றினார்.
இன்றைய நாள் நிறைவில் 3 விக்கெட்டுக்கள் கையிருப்பில் இருக்க இந்திய அணி 89 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
ரிஷாப் பான்ட் இன்று தனது 3 வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது .
விராட் கோலி மீண்டும் ஒரு தடவை ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார், சென்னை டெஸ்டில் முதலாவது போட்டியில் மொயின் அலியினுடைய பந்துவீச்சில் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்த கோலி, இந்த தொடரில் மீண்டும் ஒரு தடவை இன்று பென் ஸ்டோக்ஸ் இன் பந்துவீச்சில் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்தார்.
விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்வில் ஒரே தொடரில் இரண்டு தடவை ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் .
ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் வைத்து 2014ஆம் ஆண்டு தொடரிலும் ,இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து உடனான தொடரிலும் கோலி ஒரே டெஸ்ட் தொடரில் இரண்டு தடவைகள் டக்கவுட் முறை மூலமாக ஆட்டம் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா சார்பில் ரோஹித் சர்மா 49 , ரஹானே 27 ,பான்ட் 101 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்தாலும் களத்தில் சுந்தர் 60 ஓட்டங்களுடனும், அக்சர் பட்டேல் 11 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இங்கிலாந்து தமது முதல் இன்னிங்க்சில் 205 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
பென் ஸ்டோக்ஸ் 55 , லோரன்ஸ் 46 , ஜோ ரூட் 5 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.
பந்து வீச்சில் அக்சர் பட்டேல் 4 , அஷ்வின் 3 , சிராஜ் 2 , வோஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்முலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை நோக்கி இந்தியா வலுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது, இந்த போட்டியில் தோல்வியை தவிர்த்தாலே இந்தியா, நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாளை போட்டியின் 3ம் நாள் ஆட்டம் தொடரும்.