இந்திய கிரிக்கட் அணியின் இளம் வீரர் ரிசாப் பாட்டின் அதிரடி மட்டுமல்ல அவரது பெருந்தன்மையான செல்லும் எல்லோராலும் பாராட்டப்படுகிறது .
இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியின் போட்டி ஊதியம் முழுவதும் நன்கொடையாக வழங்குவதாக பான்ட் அறிவித்துள்ளார்.
நேற்று பெப்ரவரி 7 ம் திகதி உத்தராகண்டின் சாமோலி மாவட்டத்தில் உள்ள ரிஷிகங்கா போன்ற நதிகளில் ஏற்பட்ட “பனிப்பாறை வெடிப்பு” காரணமாக 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 125 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இந்த துன்பியலான சம்பவத்தின் மீட்பு பணிகளுக்கும் அதனோடிணைந்த செயல்பாடுகளுக்குமாக பான்ட் தனது போட்டி ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பனிப்பாறை வெடிப்பு- வீடியோ இணைப்பு
Glacier burst hits Chamoli in Uttarakhand. Here's what happened on Sunday. #ITVideo #Chamoli #Uttarakhand pic.twitter.com/Nu1cx6ASmw
— IndiaToday (@IndiaToday) February 8, 2021