பான்டை தொடர்ந்து இந்திய அணியில் இன்னும் சிலருக்கும் கொரோனா தோற்று…!

பான்டை தொடர்ந்து இந்திய அணியில் இன்னும் சிலருக்கும் கொரோனா தோற்று…!

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவுள்ளது.

இந்த தொடருக்கு முன்னர் இந்தியாவின் விக்கெட் காப்பாளர் பான்ட் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

இதனால் இந்திய கிரிக்கெட் அணி நெருக்கடிகளை சந்தித்துவரும் நிலையில் , பயிற்சியாளர் குழாமில் ஒருவரான Throwdown Specialist தயானந் காரணி கொரோனா தொற்றுக்கு இலக்கானதாகவும் அறியவருகின்றது.

 

 

அதேநேரம் பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் மற்றும் விக்கெட் காப்பாளர் விரித்திமான் சஹா, அபிமன்சு ஈஸ்வரன் ஆகியோரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.