பாபர் அசாமுக்கு வந்த சோதனை, அடுக்கடுக்காய் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விழும் அடி…!

பாபர் அசாமுக்கு வந்த சோதனை, அடுக்கடுக்காய் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விழும் அடி…!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரும், முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான பாபர் அசாம், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறார்.

இன்று(16) இடம் பெற்ற முல்தான் சுல்தான் அணியுடனான போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியது.

உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருக்கும் பாபர் அசாம் தலைவராக இருக்கின்ற கராச்சி அதக  இந்த தோல்வியோடு சேர்த்து அடுத்தடுத்து 8 வது தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளின் அடுத்த சுற்றுக்கு தேர்வாக தவறியுள்ள கராச்சி அணி இதுவரைக்கும் எதுவித வெற்றிகளையும் பெறாத நிலையில் அடுக்கடுக்காகத் தோல்விகளை சந்தித்து  உள்ளமை ரசிகர்களுக்கு வேதனையை உண்டுபண்ணியுள்ளது.

பாபர் அசாம் விரைவில் இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்..