பாபர் அசாம், பாவாட் அலாம் இணைப்பாட்டத்தில் மீண்டது பாகிஸ்தான் அணி…!

பாபர் அசாம், பாவாட் அலாம் இணைப்பாட்டத்தில் மீண்டது பாகிஸ்தான் அணி…!

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நேற்று ஆரம்பித்தது.

போட்டி ஆரம்பமானது முதல் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி வைத்தியங்களை சந்தித்தது.

முதல் 2 ஓட்டங்களில் 3 விக்கட்டுகளை பாகிஸ்தான் அணி இழந்தது, ஆரம்ப வீீரர்கள் , மற்றும் அசார் அலி ஆகியோர் விரைவாக அகற்றப்பட்டும் மிகச் சிறப்பான ஒரு ஓட்ட எண்ணிக்கையை நீற்றைய நாளிலே பாகிஸ்தான் பெற்றுக்கொண்டமை கவனிக்கத்தக்கது.

இருவரும் சத இணைப்பாட்டத்தை நேற்றைய போட்டியில் பெற்றுக்கொள்ள  பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஒரு கட்டத்தில் 2 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த பாகிஸ்தான் நேற்று நாளை வெற்றிகரமாக முடித்து இருக்கின்றமை பாராட்டத்தக்கது.

75 ஓட்டங்கள் பெற்ற பாபர் அசாம் 26 வது அரைச் சதத்தை நேற்றைய போட்டியில் பூர்த்தி செய்தார், பாவாட் அலாம் 76 ஓட்டங்கள் பெற்று உபாதையால் வெளியேறினார்.

இன்று போட்டியின் 2 ம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது.