பாபர் அஸாமின் காதலர்கள் நாங்கள் ?

பாபர் அஸாமின் காதலர்கள் நாங்கள் ?

பாகிஸ்தான் அணியின் பக்கம் பச்சை நிறமே பச்சை நிறமே என்று வெறித்தனமாக ரஹ்மானிசம் ரிதமிக்கின்றவர்களிடம் உங்களின் Most loved one யார் எனக் கேட்டால் யோசிக்காமல் சொல்லிவிடுவார்கள் “பாபர் அஸ்ஸாம்” என்று. அதே போல கிரிக்கெட்டை நேசிக்கின்றவர்களிடம் உங்கள் மோஸ்ட் பேவரைட் கிரிக்கெட்டர்ஸ் யார் என்று கேட்டால் டொப் டென் பட்டியல் போடுவார்கள். அந்த பட்டியலில் நிச்சயமாக பாபர் அஸ்ஸாம் என்ற பெயரும் இருக்கும்.

பாபர் அஸாம் zero haters ன் வெண் zebra. கிரிக்கெட் உலகில் பாபரை வெறுக்கின்றவர்களும் இருக்கின்றார்கள் என்று புள்ளி விவரம் காட்டினால் சம்திங் ரோங் என்று ஆழ் மனசு அடித்துச் செல்லும். அது தான் பாபரின் அட்மொஸ்ட் அழகு. zero haters கொண்ட அரிதான சிலருள் அவரும் ஒருவர்.

பாகிஸ்தான் மேட்ச் ஆடினால் எல்லோரினது எதிர்பார்ப்பும் பாபர் மெகா சைஸில் ஸ்கோர் பண்ண வேண்டும் என்பதுதான். பாபர் பிட்ச்சிக்கு வந்து விட்டால் ஆளாளுக்கு பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விடுகின்றார்கள் பெரிதாக இன்று அந்த துடுப்பாட்டன் bat னால் beast பண்ண வேண்டுமென்று.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற Asia Cup fournament ல் நடந்து முடிந்த மூன்று மேட்ச்சிலும் பாபர் அசாம் வந்த வேகத்தில் back to pavilion ஆன போது அவரது ரசிக மகாஜனங்கள் Shock to pavilion ஆனார்கள். தாங்கள் நேசிக்கின்ற அணி வெற்றி பெற்ற போதும் கூட பாபர் ஸ்கோர் பண்ணவில்லையே என்ற வருத்தம் எல்லோரிடமுமே இருக்கின்றது.

அடுத்த மெட்சிலாவது பாபர் ஃபோர்முக்கு திரும்புவார் என்று ரசிக மகா ஜனங்கள் கனவுகளோடு காத்து கிடக்கின்றார்கள். “கிரிக்கெட்டின் மூன்று Format லும் best பாபர் தான்” என்று கோஹ்லி திருவாய் மலர்ந்தருளிய தருணத்திலிருந்து பாபரின் batல் லோரன்ஸின் முனியும் காஞ்சனாவும் கூட்டுத் தயாரிப்பில் சூனியம் வைத்து விட்டார்கள் என்று பெரும்பாலான ரசிகர்கள் புகைந்து கொண்டிருக்கின்றார்கள்.

எங்கோ இருக்கின்ற ஒரு நடிகர் மீது எங்கோ இருக்கின்ற ஒரு விளையாட்டு வீரன் மீது எங்கோ இருக்கின்ற ஒரு இசைக் கலைஞன் மீது ஏதோ ஒரு காரணத்தினால் நமக்குள்ளே காதல் வழிந்து சிந்த ஆரம்பித்து விடுகின்றது. அதற்கு 1008 காரணங்கள் இருக்கலாம். பாபர் அசாம் என்கின்ற அந்த அதட்டலற்ற துடுப்பாட்டன் மீது அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்ற அபரீதமான காதலும் அப்படித்தான்.

பாபரை ஒரு கிரிக்கெட் வீரராக மனசுக்குள்ள வைத்து மத்தாப்பு விடுவதற்கு பாபர் என்கின்ற அந்த பையனின் துடுப்பாட்டம் மட்டுமல்ல அவரது அட்டகாசமற்ற நடத்தையும்தான் காரணம்.

பாபர் மைதானத்தில் 50 களாலும் 100களாலும் அமர்க்களப்படுத்துகின்ற போது ஏதோ தாங்களே செஞ்சரி ஸ்கோர் பண்ணிய லெவலில் ஆளாளுக்கு வைத்து ஹோலிப் பண்டிகை கொண்டாடுகின்றார்கள்.

மனசார ஒருவரை நாம் நேசிக்கின்ற போது அவருக்கான பிரார்த்தனைகள் எப்போது ஏறு வரிசையிலேயே இருந்து கொண்டிருக்கும். அது ஒரு வேளை நேசிக்கப்படுகின்ற ஆன்மாவுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் அந்த நேசம் ஆழ்மனதில் இருக்கும் வரை அவருக்கான பிரார்த்தனைகள் அவருக்கு தெரியாமலேயே தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

ரசிகர்களின் பாபருக்கான நேசமும் அவருக்கான பிரார்த்தனைகளும் அந்த ரகம் தான். இனிவரும் மெட்ச்சுகளில் பாபர் அசத்துவார் என்கின்ற ஆழமான நம்பிக்கையோடு அவரது காதலர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

பாபர் மைதானத்தில் ஒருவேளை துடுப்பாட்டத்தில் சொதப்பல் சிருங்காருங்களால் சாரி பாஸ் என்று சொன்னாலும் கூட அவரது ரசிகர்கள் அவரை போட்டு தூர்வார மாட்டார்கள். மாற்றமாக Form is temporary but Class is permanent என்று சொல்லி ஆளாளுக்கு அவசர கவுன்சிலிங் எடுத்துக் கொள்வார்கள். தற்போது Form க்காக போராடிக் கொண்டிருக்கும் விராட் கோலிக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் பட்டுக் கொள்கின்ற மாதிரி.

இந்த மாதிரியான mentality எப்போதுமே அதீதமாக நாம் ஒருவரை காதலிக்கின்ற போது சொல்லாமல் கொள்ளாமல் நம்முள்ளே நுழைந்து விடுகின்றது.

“உன்னை விட்டால் வேறு யாருமே எனக்கு கிடையாது நீ இன்றி நான் இல்லை” என்று வெனிலா ஐஸ் கிரீம் ஆக உருகி உருகி யெளவன வயதுகளில் காதலிக்கின்ற போது நாம் நேசிக்கின்ற அந்தப் பெண் விடுகின்ற எல்லா தப்புகளும் நமக்கு சரியானவைகளாகப்படும். காதலிக்கும் பெண்ணின் கையெழுத்திலே கண்ட பிழைககள் கூட கவிதையாகுமே என்ற வகையறா இது.

நாம் நேசிக்கின்ற நபர் யாராவது இருக்கட்டும். மும்தாஜாக இருக்கலாம் அல்லது கும்தாஜாக இருக்கலாம். ஆழமாக நேசிக்கின்ற போது அவருக்காக நாங்கள் பிரார்த்தனைகளோடு கையேந்தி கிடக்கின்றோம்.

அடுத்த மெட்ச்சுகளில் பாபர் அசத்துவார் என்ற பெரும் கனவுகளோடு அவரை ஆழமாக நேசிக்கின்ற ஒவ்வொரு ரசிகனும் இங்கே லோட்ஸ் கனவுகளோடு ஈடன் கார்டன் இதயத் துடிப்புகளோடு பெருவிரல் நகம் கொறித்துக் கொண்டிருக்கின்றான்.

சக மனிதர்களால் ஆழமாக நேசிக்கப்படுவதற்கும் பெருங் கொடுப்பினை வேண்டும். எல்லோருக்கும் அது அமைந்து விடாது. நேசிக்கப்படுவது என்பதே வாழ்வின் மிகப்பெரும் அற்புதம். அந்த அற்புதம் ஒரு சிலருக்கு மாத்திரம் சரியாக அமைந்து விடுகின்றது. சக மனிதர்களால் நான் நேசிக்கப்படுகின்றேன் என்பதே எனது வாழ்வின் மிகப்பெரும் அர்த்தம்தானே.

அது சரி பாபர் அஸாம் 50 அல்லது 100 அடிக்கின்ற போது ஏற்படுகின்ற அந்த சந்தோஷத்துக்கு பெயர் என்ன மக்காள்.

ஐ லவ் யூ செல்லம்

2022/09/06

சபருல்லா ஹாசீம் (சட்டத்தரணி) ,கிண்ணியா , திருக்கோணமலை