பாபர் ஆசாமியின் சதம் -பாகிஸ்தான் அணி அசத்தல் வெற்றி .

தென்ஆப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சற்று முன்னர் நிறைவுக்கு வந்தது .

சென்சூரியன் மைதானத்தில் நிறைவுக்கு வந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இறுதிப் பந்தில் ஒரு ஓட்டம் தேவையான நிலையில் மூன்று விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது .

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவராக பவுமா நியமிக்கப்பட்டதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி பங்கெடுத்த முதல் ஒருநாள் போட்டி ஆக இந்த போட்டி அமைந்தது .

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது .

பாபர் அசாம் சதமடித்தார் ,பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி பாபர் அசாம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 13 ஆவது சதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

இமாம்-உல்-ஹக் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் காணப்பட்டது .

இறுதி நேரத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையில் இறுதி இரண்டு பந்துகளில் 3 ஓட்டங்கள் தேவை என்ற நிலை வந்தபோது பாகிஸ்தான் போட்டியில் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது .

பாபர் அசாம் இன்று தன்னுடைய 13 ஆவது சதத்தை பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது.