பாபர் சதம்;உலக சாதனை வெற்றியை நோக்கி பாகிஸ்தான் போராட்டம்!

பாபர் ஆசாம் சதம்; பாகிஸ்தான் போராட்டம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நால் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 192 ரன்களைச் சேர்த்துள்ளது.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்று தொடங்கியது. ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்று தொடங்குகிறது. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது.
இதில் கராச்சியில் பாகிஸ்தான் – அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா. உஸ்மான் கவாஜா 160, ஸ்மித் 72, அலெக்ஸ் கேரி 93 ரன்கள் எடுத்தார்கள். பேட் கம்மின்ஸ் 34, ஸ்வெப்சன் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆசியாவில் ஆஸ்திரேலிய அணியின் 6ஆவது பெரிய ஸ்கோர் இது.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி பேட்டர்கள், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்கள். ஒருவராலும் 40 ரன்னைத் தொட முடியாமல் போனது. கேப்டன் பாபர் ஆசாம் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி கடைசி விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்தது. ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் ஸ்வெப்சன் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

408 ரன்கள் முன்னிலை பெற்று பாகிஸ்தானை ஃபாலோ ஆன் செய்த ஆஸ்திரேலிய அணி, 2ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய முன்வந்தது. 3ஆம் நாள் முடிவில் 17 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. கவாஜா 35, லபுசாக்னே 37 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
4ஆம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 2ஆவது இன்னிங்ஸில் 22.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. லபுஷேன் 44, கவாஜா 44* ரன்கள் எடுத்தார்கள். இதனால் 2ஆவது டெஸ்டை வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு 506 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி களிறங்கிய பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக், அசார் அலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த அப்துல்லா ஷஃபிக் – கேப்டன் பாபர் ஆசாம் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் ஆசாம் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் அப்துல்லா ஷஃபிக் அரைசதம் கடந்தார்.

இதன்மூலம் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைச் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் பாபர் அசாம் 102 ரன்களுடனும், அப்துல்லா ஷஃபிக் 71 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Abdh