பாரளுமன்ற உறுப்பினர்களே வீட்டில் இருங்கள் – #Gohomegotta டுவிட்டரில் கொதித்த மஹேல..!

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இலங்கை பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு தேரவாகி பின்னர் மீண்டும் பதவிதுறப்பு நாடகம் குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல ஜயவர்தன கடுமையாக சாடியுள்ளார்.

பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக வாக்கெடுப்பின்மூலம் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தான் மீண்டும் அந்த பதவியை துறப்பதாக அறிவித்து மீண்டும் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

“இது நகைச்சுவையா? தற்போதைய நிதி நெருக்கடியில் அவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் இந்த நியமனமா என்பது போல் நேரத்தையும் பணத்தையும் வீணடித்தது மாத்திரமல்லாமல் மேலும் அவர் மீண்டும் ராஜினாமா செய்கிறார் ?‍♂️” என்று மஹேல தனது கோபத்தை ட்வீட் செய்துள்ளார்.

“இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருக்க முடியுமா ?? #GoHomeGota” என்று அவர் மேலும் தனது பதிவில் கூறினார்.