பாரிய நிதி நன்கொடைகளை அறிவித்திருக்கும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் ?

பாரிய நிதி நன்கொடைகளை அறிவித்திருக்கும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் ?

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இலங்கையின் சுகாதார அபிவிருத்திக்கு மட்டுமல்லாது இலங்கையின் பல்துறைசார் விளையாட்டுகளுக்கும் அதிகமாக பல்வேறு விதமான நிதி உதவித் திட்டங்களை இன்று அறிவித்திருக்கிறது.

அதனடிப்படையில் இலங்கையின் பிரபலமான குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோனுக்கு இரண்டு ஆண்டுகளுக்காக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை அவருக்கு ஊக்கத்தொகையாக வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

இதே போன்று அபேக்‌ஷா மருத்துவமனை மருத்துவமனை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை ஆகியவற்றிற்கும் நிதி உதவிகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட்  இன்று அறிவித்திருக்கிறது.

நன்கொடைகள் பின்வருமாறு ?

?காமன்வெல்த் விளையாட்டு அணிக்கு ரூ 22.5 மில்லியன்

?தேசிய விளையாட்டு நிதிக்கு ரூ.100 மில்லியன்

?யுபுன் அபேகோனுக்கு USD 100,000 (ஆண்டுக்கு 50,000)

?அபேக்ஷா மருத்துவமனைக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

?லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு USD 1 மில்லியன்