பாரிய மாற்றங்களோடு இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளை முகம் கொடுக்கப் போகும் இங்கிலாந்து அணி -3 வீரர்கள் அழைப்பு ..!

பாரிய மாற்றங்களோடு இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளை முகம் கொடுக்கப் போகும் இங்கிலாந்து அணி -3 வீரர்கள் அழைப்பு ..!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் இடம்பெறவுள்ளன .

மூன்று போட்டிகள் நிறைவு வந்திருக்கின்ற இந்த நேரத்தில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்று தொடரில் மும்முரமாக முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.

தொடரை தீர்மானிக்கவல்ல நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளுக்கு சில மாற்றங்கள் அணிகளில் மேற்கொள்ளப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இங்கிலாந்தின் பிரபலமான டெய்லி மெயில் தகவல்களின் அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு 3 வீரர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன .

குறிப்பாக இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளராக செயல்பட்ட பட்லர், அவருடைய மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க இருப்பதால் அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களையும் அவர் தவறவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனால் விக்கட் காப்பாளராக பெயர்ஸ்டோ செயல்படவுள்ளதாகவும் அறியப்படுகிறது.

பெயர்ஸ்டோ விக்கெட் காப்பாளராக செய்யப்படும் பட்சத்தில் பட்லரின் இடத்தில் 24 வயதான டான் லோரன்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது மாத்திரமல்லாமல் சகலதுறை ஆட்டக்காரர் கிறிஸ் வோக்ஸ் ,மற்றும் ஏற்கனவே தொடரில் பங்கேற்று உபாதையால் வெளியேறிய  மார்க் வூட் ஆகியோர் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்குமான அணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

Mark wood ,Lawrance

ஏற்கனவே அணியில் சோபிக்க தவறிய சாம் கர்ரனுக்கு பதாலாக வோக்ஸ் அணிக்கு கொண்டு வரப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகின.

இது தொடர்பில் இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை இதுவரைக்கும் எதையும் உறுதிப்படுத்தவில்லையாயினும்  டெய்லி மெயில் செய்தியை ஆதாரம் காட்டி இந்த செய்தியை தருகிறோம்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

8.09 PM

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பிந்திய இணைப்பு ??

நாங்கள் மேற்குறிப்பிட்ட விபரங்களை அடிப்படையாக கொண்டு, அதே இங்கிலாந்து அணியின் விபரம் வெளியாகி இருக்கிறது .

இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை சற்று முன்னர் நான்காம் மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள அணி விபரத்தை அறிவித்திருக்கிறார்கள் .

அணிக்கு நாங்கள் மேலே குறிப்பிட்டதை போன்று லோரன்ஸ் ,கிறிஸ் வோக்ஸ், வூட் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்

முழுமையான அணி விபரம் ??

Update -8.54 PM