பிரபலமான கால்பந்து நட்சத்திரமான லூயிஸ் சுவாரஸ் ஒரு அதிரடியான பேட்டி ஒன்றில் பார்சிலோனா அணியின் நிர்வாகம் தன்னை முழுமையாக நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார் .
ஆனால் அட்லெட்டிகோ மாட்ரிட் எனக்கான கதவுகளைத் திறந்து என்னை நம்பி அழைத்தது, அவர்களுக்கு தொடர்ச்சியாக நான் சிறந்த பங்களிப்பை நல்குவேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஸ்பானிய கால்பந்தாட்ட கழகங்களுக்கு இடையில் இடம்பெறுகின்ற லா லீகா தொடரின் சாம்பியன் மகுடத்தை அட்லடிகோ மாட்ரிட் அணி நேற்றைய நாளில் சூடிக் கொண்டது, இந்த அணியின் நட்சத்திர வீரரான லூயிஸ் சுவாரஸ் மிகச்சிறப்பாக தொடர் முழுவதும் பிரகாசித்தார்.
கடந்த காலங்களில் இவர் பிரபலமான நட்சத்திர வீரர் மெஸ்ஸியுடன் இணைந்து பார்சிலோனா கழகத்திற்காக அசத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே பார்சிலோனா கழகம் தன்னை முழுமையாக நம்பவில்லை என்னும் கருத்தை லூயிஸ் சுவாரஸ் வெளியிட்டிருக்கிறார்.
நேற்று சாம்பியன் மகுடம் சூடிய பின்னர் மெஸ்ஸி இவருக்கு தொலைபேசி மூலமாக பேசியபோது இவர் கண்ணீர் மல்கிய காட்சிகளும் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது.