பால்ய நண்பர்களுக்கிடையிலான போட்டி – ராகுலிடம் வீழ்ந்த மயாங்க்…!

ஐபிஎல்- பஞ்சாப் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. புனேவில் இன்று நடைப்பெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி லக்னோ முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் – டி காக் களமிறங்கினர். நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ராகுல் இந்த முறை 6 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அதன் பிறகு தீபக் ஹூடா – டி காக் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் டி காக் 46 ரன்களில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து ஹூடா 36 ரன்களில் ரன் அவுட்டாக அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்டினர். இதனால் லக்னோ அணி சரிவை நோக்கி சென்றது . இறுதியில் ஹோல்டர் – சமீரா ஜோடி சிக்சர்களை விரட்டி அதிரடி காட்டினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 25 ரன்களில் அவுட்டாகினார். அவரை தொடர்ந்து பேர்ஸ்டோவ் களமிறங்கினார். பின்னர் தவான் 15 பந்துகளை சந்தித்த நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ரவி பிஷ்னாய் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து ராஜபக்சா 9 ரன்களில் க்ருனால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின் பஞ்சாப் அணி தொடர்ந்து சரிவை நோக்கி சென்றது. அடுத்தடுத்து பஞ்சாப் வீரர்கள் லிவிங்ஸ்டோன் (18) , ஜிதேஷ் சர்மா (2) ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் நிதானமாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் 32 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இதனால் பஞ்சாப் அணி 16 ஓவர்களில் 105 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட ரபாடா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட ஆவேஸ் கான் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர் விளாசிய ரிஷி தவன் 2-வது பந்தை பவுண்டரி விரட்ட கடைசி 4 பந்தில் 21 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த 4 பந்திலும் ரன் எதுவும் வரவில்லை

இறுதியில் பஞ்சாப் அணி ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. லக்னோ அணி தரப்பில் மொஹ்சின் கான் 3 விக்கெட்களும் க்ருனால் பாண்டியா, சமீரா ஆகியோர் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றினர். இதன் மூலம் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது.

Abdh