பாவாட் அலாமை ஏன் அணிக்கு தேர்வு செய்யவில்லை- வேடிக்கையான கருத்து தெரிவித்திருக்கும் இன்சமாம்.!

பாவாட் அலாமை ஏன் அணிக்கு தேர்வு செய்யவில்லை- வேடிக்கையான கருத்து தெரிவித்திருக்கும் இன்சமாம்.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய பேசு பொருளாக இருக்கும் பாவாட் அலாம் பாகிஸ்தான் அணிக்கு துடுப்பாட்டத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கி வருகிறார்.

2009 ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அலாம் அதன்பின்னர் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக பாகிஸ்தான் தேர்வாளர்களால் வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டார்.

அலாம் மீண்டும் டெஸ்ட் அணிக்கு  திரும்பியதிலிருந்து மிகப் பெருமளவிலான ஓட்ட பங்களிப்பை நல்கிவருதோடு கடந்த ஓராண்டில் மட்டும் 4 சதங்களை விளாசி தன் வரவை நியாயப்படுத்தியுள்ளார்.

ஆகமொத்தத்தில் கடந்த 11 ஆண்டுகளாக ஏன் அலாம் போன்ற ஒரு சிறந்த ஆட்டக்காரரை பாகிஸ்தான் தேர்வாளர்கள் கண்டுகொள்ளவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இது தொடர்பில் பாகிஸ்தானின் முன்னாள் தலைமை தேர்வாளாராக இருந்த inzamam-ul-haq ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.

நான் பதவியில் இருந்து மூன்று ஆண்டுகளில் ஏராளமான திறமையான வீரர்களை அணிக்காக கொண்டு வந்திருக்கிறேன், 12 முதல் 14 புதிய வீரர்களுக்கு நான் வாய்ப்பு கொடுத்திருக்கிறேன், எந்த ஒரு வீரரும் தேர்வை புறம்தள்ளும் விதமாக எங்களை ஏமாற்ற வில்லை .

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் நான் தலைமை தேர்வாளராக இருந்த காலத்தில் அலாமை விடவும் உள்ளூரில் பிரகாசித்த சிறந்த வீரர்களை கண்டிருக்கிறேன் .

அதனால் தான் பாவாட் அலாமை தேர்வு சைய்யவில்லை எனும் வேடிக்கையான கருத்தை இன்சமாம் தெரிவித்திருக்கிறார் .

எனக்கு முற்பட்ட காலத்தில் ஏன் அலாம்  தேர்வாகவில்லை என்பது எனக்குத் தெரியாத விடயம் எனவும் இன்சமாம் தெரிவித்திருக்கிறார்.