பிக் பாஷ் லீக் போட்டிகளில் நான்காவது முறையாக கிண்ணம் வென்று சாதித்தது பேர்த் ஸ்கார்சேர்ஷ்..!

பிக் பாஷ் லீக் போட்டிகளில் நான்காவது முறையாக கிண்ணம் வென்று சாதித்தது பேர்த் ஸ்கார்சேர்ஷ்..!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வந்த பிரபலமான பிரான்ஷைஸ் கிரிக்கெட் தொடரான பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் இன்றைய நாளில் நிறைவுக்கு வந்துள்ளது.

பிக் பாஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பலம்பொருந்திய அணிகளான பேர்த் ஸ்கார்சேர்ஷ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் விளையாடின.
பிக்பாஸ் லீக் சரித்திரத்தில் அதிக தடவைகள் கிண்ணத்தை சுவீகரித்த அணிகளான இந்த இரு அணிகளும் இதுவரை தலா மூன்று தடவைகள் கிண்ணத்தை சுவீகரித்திருந்த நிலையில் நான்காவது தடவையாக கிண்ணத்தை வெல்லும் அணி எது என்கின்ற கேள்விகள் அதிகரித்திருந்தது.

இந்த நிலையில் முதலில் துடிப்பாடிய ஆஸ்டன் டேர்னர் தலைமையிலான பேர்த் ஸ்கார்சேர்ஷ் அணிக்காக அணித்தலைவர் ஆஸ்டன் டேர்னர் 54 ஓட்டங்களையும், லூயிஸ் அதிகபட்சமாக 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

171 எனும் இலக்கோடு துடுப்பெடுத்தாடிய மொய்சஸ் ஹென்றிகுஸ் தலைமையிலான சிட்னி சிக்சர்ஸ் அணி முக்கிய இறுதி போட்டிகளில் 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

2012 ,2013 ,2016 ,2022ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து இப்போது நான்காவது தடவையாக பிக் பாஷ் தொடரில் பேர்த் ஸ்கார்சேர்ஷ் அணி கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.