பிட்ச் தொடர்பில் யுவ்ராஜ் சிங் தெரிவித்த கருத்து என்ன தெரியுமா ?

பிட்ச் தொடர்பில் யுவ்ராஜ் சிங் தெரிவித்த கருத்து என்ன தெரியுமா ?

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன்முலம் தொடர் 2-1 என்ற நிலைக்கு வந்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டி வெறுமனே 2 நாட்களிலேயே நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இந்த போட்டிக்காக தயார் செய்யப்பட்ட பிட்ச் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2 நாட்களில் ஒரு டெஸ்ட் போட்டி நிறைவுக்கு வருவது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமற்றது என்று இந்தியாவின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இப்படியான பிட்ச் இருக்குமாக இருந்தால் கும்ப்ளே மற்றும் ஹாட்பாஜன் போன்றோ 1000 விக்கெட்களையோ அல்லது 800 விக்கெட்களையோ கைப்பற்றி சாதித்திருப்பார்கள்.

ஆயினும் அக்சர் பட்டேல் மற்றும் அஷ்வினுக்கு வாழ்த்துக்கள் என்றும் யுவ்ராஜ் கருத்து வெளியிட்டுள்ளார்.