பிரஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடர் -ரோஜர் பெடரர் திடீர் விலகல் …!

கிராண்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் பிரஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடர் இடம் பெற்று வருகிறது .

இந்த போட்டி தொடரில் சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர் உபாதை காரணமாக இடைநடுவே விலகுவதாக அறிவித்துள்ளார்.

39 வயதான பெடரர், அண்மையில் கணுக்கால் உபாதை காரணமாக சத்திரசிகிச்சையை எதிர்கொண்டிருந்தார், அதிலிருந்து மீண்டு பிரஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாடியபோது மூன்றாவது சுற்று ஆட்டத்தை மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக முகம் கொடுத்து வெற்றி பெற்றிருந்தார்.

 

ஆயினும் 4வது சுற்றுக்கு தெரிவாகி இருந்த நிலையில், பெடர்ர் உபாதை காரணமாக தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாக அறிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கவலையை தோற்றுவித்துள்ளது.