பிரட் லீயின் சிறப்பு பந்துவீச்சில் இந்திய அணியை தோற்கடித்தது உலக அணி..!

பிரட் லீயின் சிறப்பு பந்துவீச்சில் இந்திய அணியை தோற்கடித்தது உலக அணி..!

ஓமானில் இடம்பெற்று வருகின்ற முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இடையிலான லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் ஆட்டத்தின் இறுதி போட்டிக்கு உலக அணி தேர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று இடம்பெற்ற இந்திய மகாராஜாஸ் மற்றும் உலக அணிகளுக்கிடையிலான பரபரப்பான போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவிக் கொண்டது.

உலக அணஇக்கும், இந்திய மகாராஜா அணிக்கும் இடையிலான போட்டியில் இரு அணிகளுமே 200க்கும் அதிகமான ஓட்டங்களைக் குவித்து கொண்டன.

உலக அணி 228 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, இந்திய மகாராஜா அணி 229 எனும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய போது இறுதி 6 பந்துகளில் 8 ஓட்டங்கள் தேவையாக இருந்தது.

பிரட் லீ வீசிய பந்து வீச்சில் முதல் பந்திலேயே இர்பான் பதானை ஆட்டமிழக்கச் செய்தார் ,அவரது சாகச பந்துவீச்சின் மூலமாக அந்த போட்டியில் உலக அணி, இந்திய மகாராஜா அணியை தோற்கடித்தது.

இதன் மூலமாக லெஜெண்ட்ஸ் லீக் ஆட்டங்களில் இறுதிப்போட்டியில் ஆசிய  அணியோடு உலகு அணி விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.