பிரபல கால்பந்து நட்சத்திரம் சிடேனுக்கு கொரோனா தோற்று.

பிரபல கால்பந்து நட்சத்திரம் சிடேனுக்கு கொரோனா தோற்று.

பிரபல முன்னாள் கால்பந்து நட்சத்திரமும் தற்போதைய ரியல் மாட்ரிட் கழகத்தின் முகாமையாளருமான சினடின் சிடேனுக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது.

இதனை ரியல் மாட்ரிட் கழகம் கடந்த வெள்ளிக்கிழமை (22) அறிவித்தது .

கொரோனா தோற்றாளர் ஒருவருடன் தொடர்பை பேணியதால், கடந்த ஒரு மாதமாக சிடேன் சுய தனிமைப்படுத்தலில் இருந்தார், ஆயினும் அதன்பின்னரான பரிசோதனைகளில் அவருக்கு தோற்று இல்லை என்று உறுத்திப்படுத்தப்பட்ட நிலையிலேயே சிடேன் அணியினருடன் இணைந்து செயற்பட்டிருந்தார்.

சிடேன் தனது கொரோனா தொற்றுக்குள்ளானதன் பிறகு நன்றாக இருப்பதாகவும், இருப்பினும் வீரர்கள் மத்தியில் இல்லாதது வருத்தமாக உள்ளதாகவும் அணியின் உதவி பயிற்சியாளர் டேவிட் பெட்டோனி கூறினார்.