பிரபல கிரிக்கெட் நடுவர் உயிரிழப்பு…!

உலக கிரிக்கெட் அரங்கில் புகழ்பெற்ற நடுவராக இருந்த ரூடி கிர்ஸ்டன் கார் விபத்தில் நேற்று (9) உயிரிழந்துள்ளார். ரூடி கிர்ஸ்டன் இறக்கும் போது அவருக்கு வயது 73. ரூடி தனது நண்பர்களுடன் கோல்ஃப் போட்டிக்கு சென்றபோதே உயிரிழந்ததாக ரூடியின் மகன் கூறினார்.

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தென்னாப்பிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் களத்தில் திறமையான நடுவராக இருந்த ரூடி கிர்ஸ்டன் 108 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார். மேலும், ரூடி கிர்ஸ்டன் 209 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.

2007 உலகக் கோப்பை ஒருநாள் போட்டியின் இறுதிப் போட்டியில் ரூடி கிர்ஸ்டன் நடுவராகச் செயல்பட்டார், இது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றொரு துரதிஷ்டமான போட்டியாகும்.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் நடுவர் ரூடி கிர்ஸ்டன் ICC எலைட் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1992 முதல் 2010 வரை 18 ஆண்டுகள் நடுவராக பணியாற்றிய ரூடி கிர்ஸ்டனுக்கு இழப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு துயரமானதுதான் .