பிரபல டென்னிஸ் நட்சத்திரம் டொமினிக் தீம் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரில் அதிர்ச்சித் தோல்வி …!

பிரான்சில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுள் ஒன்றான பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் பிரபல டென்னிஸ் நட்சத்திரமான டொமினிக் தீம் அதிர்ச்சி தோல்வியை  தழுவி தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

தரவரிசையில் 68-வது இடத்தில் இருக்கும் பவ்லோ அன்டுஜர் எனும் வீரரிடம், தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் டொமினிக் தீம் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

 

இதன் மூலமாக பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரின் ஏனைய போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது , அத்தோடு ஜோக்கோவிச் , நடால் போன்ற முன்னணி நடசத்திரங்களுக்கும் பவ்லோ அன்டுஜர் சவாலாக திகழ்வார் எனும் கருத்து உருவாகியுள்ளது.