பிரான்ஸ் மரதன் ஓட்ட வீரரின் நாசகார செயல்- வேண்டுமென்று செய்தாரா என வெடிக்கும் சர்ச்சைகள்..!

பிரான்ஸ் மரதன் ஓட்ட வீரரின் நாசகார செயல்- வேண்டுமென்று செய்தாரா என வெடிக்கும் சர்ச்சைகள்..!

டோக்கியோவில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பிரான்ஸ் மரதன் ஓட்ட வீரர் ஒருவர் செய்த காரியம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

வீதி ஓரத்தில் மரதன் ஓட்டத்தில் ஈடுபடும் வீரர்கள் தாகத்தை தீர்த்துக் கொள்வதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் போத்தல்களை மோர்ஹாட் அம்தவுனி எனும் 33 வயதான இந்த பிரஞ்ச் மரதன் ஓட்டவீர்ர் மற்றைய போட்டியாளர்களுக்கு தண்ணீர் கிடைக்கக் கூடாது என்பதற்காக தட்டி விட்டார் என குற்றம்சாட்டப்படுகிறது.

இதன் காரணத்தால் சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேண்டுமென்றே இந்த காரியத்தில் மோர்ஹாட் அம்தவுனி ஈடுபட்டிருக்கிறார் எனவும் சமூக வலைத்தளத்தில் பேசப்படுகிறது.

இந்த மரதன் ஓட்டப்போட்டியில் கென்ய வீர்ர் கிப்சோஜே தனது இரண்டாவது தொடர்ச்சியான தங்கப் பதக்கத்தை வென்றார், நெதர்லாந்தின் அப்டி நாகீ வெள்ளி பதக்கத்தையும், பெல்ஜியத்தின் பஷீர் அப்டி வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.

Marathon Tokyo 2020

வீடியோ ஆதாரம்.