பிராவோ ஓவரில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை- பதோனி

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக லக்னோ அணி 211 ரன்களை சேசிங் செய்தது. ஆட்ட நாயகனாக லக்னோ அணியின் லீவிஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் லக்னோ அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக இக்கட்டான கட்டத்தில் இளம் வீரரான பதோனி அருமையாக விளையாடினார்.
அவர் 9 பந்துகளில் 19 ரன்கள் விளாசினார். டிவில்லியர்ஸ் போல ஒரு சிக்சர் அடித்து அசத்தினார்.
போட்டி முடிந்த பிறகு பதோனி கூறியதாவது:-
கடைசி 3 ஓவரில் 45 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோவின் கடைசி ஓவரையும் அணியின் 17 -வது ஓவரை அவர் வீசினார்.  அந்த ஓவரில் எந்தவோரு தவறாக ஷாட்டும் அடிக்க முயலவில்லை. கடைசி 2 ஓவரில் ஆட்டத்தை முடிக்கும் முயற்சியில் நானும் லீவிஸ்-ம் ஈடுப்பட்டோம். அதிரடியாக விளையாடி ஆட்டத்தை முடித்தோம்.
210 என்பது ஒரு நல்ல ஸ்கோர் என்று நினைக்கிறேன். நாங்கள் அதை சிறப்பாக சேசிங் செய்தோம் என்று பதோனி கூறினார்.
இதுவரை ஐபிஎல்லில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என கேட்டதற்கு பதோனி, மூத்த வீரர்கர் சுற்றி இருக்கும்போது உங்கள் தனித்துவத்தை இழக்காமல் நீங்களாகவே இருக்க வேண்டும். இயல்பாக இருங்கள்.
இவ்வாறு பதோனி கூறினார்.
Previous articleமகளிர் உலகக் கோப்பை : இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!
Next articleஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான அடிப்படை விலை ரூ.32,890 கோடி- கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரிப்பு