பிரிஸ்பேனில் ஆஸியை சிதறடித்த தமிழர்கள்…!!!!

 

இந்திய அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம், எதிர்பாராத வகையில் தமிழ் வீரர்களின் அபார அறிமுகத்தின் உதவியுடன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் கோட்டையான பிறிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற, நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.

ரி-20 போட்டிகளுக்கு வலைப்பந்து வீச்சாளராக அவுஸ்திரேலியாவுக்கு வந்த நடராஜனும், டெஸ்ட் வலைப்பந்து வீச்சாளராக இருந்த வாஷிங்டன் சுந்தருமே இந்த சாதனைகளை நிகழ்த்தி இருந்தார்கள்.

சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி இந்திய தெரிவாளர்களின் கதவைத் தட்டிய நடராஜன், ஒரு வெளிநாட்டு கிரிக்கெட் பயணத்தில் T20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என அனைத்து வகையான போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கின்றார்.

தனது முதல் இன்னிங்ஸில் மத்தியூ வேட், சதமடித்த மானஸ் லபுசானே மற்றும் ஹசில்வூட்டை ஆட்டமிழச் செய்திருந்தார்.

மறுபக்கம் யாரும் எதிர்பாராத வகையில் இந்தியாவின் பிரதான சுழல் பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா காயமடைய அணியில் இடம்பிடித்தார் வாஷிங்டன் சுந்தர்.

தனது கன்னி விக்கெட்டாக ஸ்ரிவ் ஸ்மித்தை ஆட்டமிக்க செய்த்தோடு, முதல் இன்னிங்ஸில் கிறீன், லயன் என மூன்று விக்கெட்டுக்களை எடுத்து அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் டேவிட் வோர்னரை ஆட்டமிழக்கச் செய்து அசத்தி இருந்தார்.

பின்னர் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக ஆடி முதல் இன்னிங்ஸில் 62 ஓட்டங்களைக் குவித்ததோடு, சாஹுல் தாஹூருடன் ஏழாவது விக்கெட்டில் 123 ஓட்டங்களைப் பகிர்ந்து சாதனை படைத்திருந்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் 44 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் இருந்த போது, உலகின் நம்பர் வன் பந்துவீச்சாளரின் பந்துகளை சிக்ஸருக்கும் தொடர்ந்து பவுண்டரிக்கும் விரட்டி, ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் மாற்றியிருந்தார்.

தழிழர் கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டிய போட்டியாக, நம்மவர்களின் அறிமுகம் அமைந்திருந்தது.

Dr Jeyaganeshan