பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரை தவறவிடும் சிமோனா ஹெலெப் …!

டென்னிஸ் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் பிரபல டென்னிஸ் நட்சத்திரமான சிமோனா ஹெலெப் உபாதை காரணமாக பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரை தவறவிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரின் சாம்பியன் மகுடத்தை சூடிய சிமோன ஹெலெப், இந்த ஆண்டு இடம்பெற இருக்கும் போட்டிகளில் பங்கெடுக்க முடியாது போகும் என்று அறிவித்திருக்கிறார்.

29 வயதான ஹெலெப், 2018ஆம் ஆண்டு பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரிலும், 2019ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் தொடறிலும் சம்பியனானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரென்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அறிவித்தலை ஹெலெப் விடுத்துள்ளார்.