பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரின் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி..!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது ,இந்த போட்டி தொடரில் முன்னாள் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 4-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

22 வயதான ரஷ்யாவின் இளம் வீராங்கனையிடம் செரினா வில்லியம்ஸ் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறினார்.

அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற உலக சாதனை படைக்க காத்திருக்கும் செரீனா வில்லியம்ஸ்க்கு இந்த தோல்வி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.