பிளசிஸை விட்டுவிட்டு கொன்வே பக்கம் சென்னை அணி ஆர்வம் செலுத்திய காரணம் என்ன தெரியுமா ?

முப்பத்தேழு வயதாகிய வெளிநாட்டு வீரர் என்பதால் மிகச்சிறந்த ஆட்டநிலையில் இருக்கக்கூடிய எல்லைச்சாமியான டூ-பிளிசஸை விட்டுவிடுதென்கிற முக்கியமான ஆனால் கடினமான முடிவுக்கு வந்திருக்கிறது சென்னை அணி நிர்வாகம்.

இது ஒருமாதிரி ஆசையும் விடாது எதார்த்தமும் உறுத்தக்கூடிய குழப்பமான நிலை. இத்தனைக்கும் ஏலத்தில் விட்ட நாளன்று பங்களாதேஷ் T20 தொடரில் சதம் அடித்திருந்தார் டூ-பிளிசஸ். இந்த முடிவுக்கு வந்ததிற்கு சென்னை அணி நிர்வாகத்தை இரசிகர்கள் பாராட்டத்தான் வேண்டும்.

ஏனென்றால் fab-m.hussey கலவையில் டெவோன் கான்வோ என்ற 30 வயதான நியூசியின் இடக்கை பேட்ஸ்மேனை திட்டமிட்டு பிடித்து வந்திருக்கிறது. உண்மையில் இது திட்டம்தான். அதனால்தான் டிகாக்-வார்னர் ஏலத்திற்கு வந்தபொழுது சும்மாய் எட்டி பார்த்ததோடு சென்னை திரும்பி வந்தது.

ஒருவேளை ஏலத்தில் கான்வோவுக்கு போட்டி அதிகமாகி இருந்தாலும் தீபக்சாஹருக்குப் போனதை போலத்தான் சென்னை போயிருக்கும். கான்வோவை விடும் திட்டம் சென்னைக்கு கிடையவே கிடையாது.

இந்த ஏலத்தின் அதிக இலாபகரமான நுகர்வு எதுவென்றால் கான்வோவை சென்னை வாங்கியதுதான். பும்ரா-ஆர்ச்சர் கூட்டணியை விட ருதுராஜ்-கான்வோ கூட்டணி ஆபத்தானது. இருவருமே விடாப்பிடியாக நின்று மோதிப்பார்ப்பவர்கள் மட்டுமல்லாது க்ளீன் ஷாட்ஸ் ப்ளேயர்ஸ். தேவைக்கு ரன் சேகரிக்கும் வேகத்தை அதிகரிக்கும் திறமைக்கொண்டவர்கள்.

கவனம்+கவனம்+அடித்தல் என்கிற பாணியிலான கான்வோவின் ஆட்ட முறைக்கு, முட்டிக்கு மேல் பெரிதாய் பந்து எழாத, பெரும்பாலும் தாழ்வாக இருந்து ஆடவேண்டிய இந்திய ஆடுகளங்கள் அதிக சிரமத்தைத் தந்துவிடாது. இதனால் மெதுவான ஆடுகளங்களும் தொந்தரவாய் இருக்காது. மேலும் கான்வோ ஒரு ஆசியக்கண்ட பேட்ஸ்மேன் அளவிற்குச் சிறப்பாய் சுழற்பந்தை ஆடுகிறார். ஸ்வீப்-ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களில் சரியான கட்டுப்பாடு இருக்கிறது. கிரிக்கெட்டின் அனைத்து விதமான அடிப்படை அடிமுறைகளையும் சர்வ சுத்தமாய் ஆடுகிறார். இதற்கு மேல் இந்தியாவில் விளையாட என்ன சிறப்புத் திறமைகள் வேண்டும்?

சர்வதேச T20 போட்டிகளில் ஆவ்ரேஜ் 50 ஆகவும் ஸ்ட்ரைக்ரேட் 140 ஆகவும் இருக்கிறது. இது ருதுராஜின் ஆட்ட கூட்டாளிக்கு அதிகமானது. சென்னை அணி அமைந்துள்ள விதத்திற்கும் அதிகமானது. இனி சென்னைப் போட்டிகளில் ஓபனர்கள் இருவருமே ஒரே நேரத்தில் தவறுவது அடுத்த ஆறு ஆண்டுகளில் மிகக் குறைவாகத்தான் நிகழுமென்று நினைக்கிறேன்.

ஆம் குறைந்தது சென்னை அணிக்காக டிவோன்-கான்வோ ஆறு ஆண்டுகளாவது ஆடுவார் அவர் விரும்பினால்!

?Richard