ஃபிளமிங் தலைமை பயிற்சியில் தென் ஆபிரிக்காவின் சூப்பர் கிங்ஸ் அணி, ஒப்பந்தமான வீரர்கள் விபரம்…!

CSK ஐ சொந்தமாக வைத்திருக்கும் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விபரம்..!

அடுத்த ஆண்டு தொடங்கும் CSA (கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா) T20 லீக் தொடர்பில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு அணியும் கடந்த சில நாட்களாக தனது ஐந்து நேரடி ஒப்பந்த வீரர்களை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை அது அறிவித்துள்ளது.

CSK உரிமையாளர்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நியூசிலாந்து முன்னாள் கேப்டனும் தற்போதைய CSK அணியின் தலைமை பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங் இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர்கள் அல்பி மோர்கல் மற்றும் எரிக் சிம்மன்ஸ் ஆகியோர் பயிற்சியாளர்களாக உள்ளனர்.

ஃபாப் டு பிளெசிஸைத் தவிர, மொயின் அலி, மகேஷ் தீக்ஷன, ருமாரியோ ஷெப்பேர்ட், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் நேரடி ஒப்பந்தத்தில் உள்ளவர்கள்.

ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களில், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி அதிக பெறுமதிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், அவருக்கு 4 லட்சம் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படுகின்றது.

கேப்டன் டு பிளெசிஸுக்கு 3.75 லட்சம் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்ட மூன்றாவது அதிகபட்ச தொகையாக இலங்கையின் ஆஃப் ஸ்பின்னர் மஹேஷ் தீக்ஷனவுக்கு 2 லட்சம் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சென்னை அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்ற மஹேஷ், ஏழு போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி, கடந்த சீசனில் சென்னை அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்தவராவார்.

ஆகமொத்தத்தில் தரமான 5 வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளமை இன்னும் சுவாரஷ்யத்தை தோற்றுவித்துள்ளது.