புஜாராவின் இடத்துக்கு தகுதியான இளம் வீர்ர் யார் தெரியுமா ?

விராட்கோலியின் டெஸ்ட் அணியிலிருந்து புஜாரா, ரகானேவுக்குத் தற்காலிக ஓய்வு வழங்கப்படுமா என்று தெரியாது.

அதேபோல் இவர்களின் இடங்களை நிரப்பக்கூடிய வீரர்களாக ஸ்ரேயாஷ், கில், பிரித்வி, மயங்க் இவர்களில் யார் வருவார்கள் என்றும் தெரியாது.

நான் பேசப்போவது வேறு ஒரு வீரரைப் பற்றி!

கிரிக்கெட்டில் இருவிதமான முடிவுகள்தான் எடுக்கப்படுகிறது. ஒன்று கையிலிருக்கும் தரவுகள், முன்னுதாரணங்களைக் கொண்டும், மற்றொன்று அவரவர் உள்ளுணர்வை வைத்தும் எடுக்கப்படும் முடிவுகள்.

இதில் நான் என் உள்ளுணர்விலிருந்து ஒன்றைச் சொல்லப்போகிறேன். அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று தெரியாது. ஆனால் நான் சொல்லப்போவது வெற்றியடைக்கூடிய, நீண்ட காலம் பயன் தரக்கூடிய ஒன்றாக இருக்குமென்று உறுதியாகக் கருதுகிறேன்.

அது இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா இடத்தில் ருதுராஜ்!

சச்சின், கங்குலி, டிராவிட்டுக்குப் பிறகு தலைமை இடத்திற்கு, முக்கியத்துத்துவம் வாய்ந்த வீரரென்ற இடத்திற்கு வருவதற்கான விளிம்பில் நின்றுகொண்டிருந்த யுவராஜை, கிடைத்த வாய்ப்பில் பின்னுக்குத் தள்ளிவிட்டதில்லாமல் இந்திய கிரிக்கெட்டில் தன் பெயரை யாராலும் அழிக்க முடியாத அளவிற்கு அழுத்தம் திருத்தமாகப் பதித்த தோனியைப் போல் ருதுராஜிம், பிரித்வி, ஸ்ரேயாஷ், கில் என்று போட்டியில் முதன்மையாகவும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களின் நல்ல அபிப்ராயத்திலும் இருக்கின்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி சாதாரணமாக தவிர்க்க முடியாத வீரராக வருவாரென்று நம்புகிறேன். குறிப்பாக டெஸ்ட் அணியில்.

அதிரடி வீரர் போல தோன்றும் ரிஷாப் பந்த் உண்மையில் நின்று ஆட வேண்டிய டெஸ்ட் போட்டியில்தான் அபாயகரமான வீரராக இருப்பார். அவரால் பெரிதாக வெள்ளைப்பந்து போட்டிகளில் ஜொலிக்க முடியாது. அவரது தாக்குதல் பாணி தூக்கியடிக்கற ஆட்ட முறைக்கு, பீல்டர்கள் வெளியிலிருக்கும் வெள்ளைப்பந்து போட்டிகள் சரிவராது.

ஆனால் ருது மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் தரமான வீரர். அதே சமயத்தில் பீல்டர்கள் பெரும்பாலும் நெருக்கமாய் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் தன் பேட்டிங் டைமிங், ஷாட்ஸ் செலக்சன் மூலமாக அபாயகரமான வெற்றிக்கரமான வீரராக இருப்பார். அடுத்து அவர் வெறுமனே ஆடிவிட்டு நகர்ந்து போகக்கூடிய வீரர் அல்ல. அவர் ஒரு இன்னிங்ஸை கட்டமைத்து கடைசிவரை எடுத்துப் போகக் கூடியவர்.

புஜாரா மூன்றாவது வீரர் இடத்தில் நாற்பதுக்கும் குறைவான ஸ்ட்ரைக்ரேட்டில் இதுவரை ஆட்டத்தில், மொத்த அணியின் ஆட்ட அணுகுமுறையில் ஏற்படுத்தி வந்த தாக்கத்திற்கு நேரெதிரான தாக்கத்தை தரக்கூடியவர் ருதுராஜ். இது புஜாரா கால இந்திய டெஸ்ட் அணியின் ஆட்ட அணுகுமுறையிலேயே மாற்றத்தை உண்டாக்கக்கூடியது. ஏனென்றால் டெஸ்ட் அணியில் மூன்றாவது இடமென்பது அப்படியான முக்கியத்துவமானது.

இதைக் கொஞ்சம் சுருக்கமாகச் சொன்னால் ருதுராஜ் தன் ஷாட்ஸ் செலக்சன், டைமிங் மூலம் டெஸ்ட் போட்டிகளில் புஜாராவை விட வேகமாக, அதேசமயத்தில் பாதுகாப்பாகவும் ரன்கள் எடுக்கக்கூடியவராக இருப்பார். அடுத்து அவர் ஆட்டத்தின் பொறுப்பை வலிந்து எடுத்துக்கொண்டு ஒரு இன்னிங்ஸை கட்டமைத்து ஆடக்கூடியவர். அடுத்து வேகமாகக் கற்கக்கூடியவர் சூழல்களை. மேலும் புஜாராவை விட அதிக ஷாட்ஸ்கள் கொண்டவர். சச்சினிடமிருந்து டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பத்தில் கிடைத்த சிறிய நூறுகளை இவரிடம் எதிர்ப்பார்க்கலாம்.

இதையடுத்து மிக முக்கியமான மூன்றாவது இடத்திலிருந்து, இதுவரை புஜாரா தந்ததிற்கு நேரெதிரான ஆட்ட பாணியில், சற்று அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் கிடைப்பதால், புஜாரா காலத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியை பேட்டிங்கில் அணுகிய விதத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கும்.

2019 இங்கிலாந்தில் நடந்த ஆசஷ் தொடர் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ஸ்மித் தலையில் அடிபட்டதால் இரண்டாம் இன்னிங்சில் வந்து அரைசதமடித்த லபுசேனுக்கு அடுத்த மேட்ச்சில் தந்த வாய்ப்பால்தான் இன்று ஆஸியின் டெஸ்ட் அணியில் மூனாவது இடத்தில் லபுசேன் குறைந்தது மூன்றுக்கு ஒரு இன்னிங்சிலாவது தன் பங்களிப்பால் அணிக்குப் பெரிய பலம் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

இந்த ரைட்டப் வெற்றியடைக்கூடிய ஆனால் நடக்காத ஒரு ஆசைதான் ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியாததால் எழுதினேன். இவர்கள் தன்னை நிரூபித்த, வயதும் இருக்க விகாரிக்கே வாய்ப்பு தராத சத்தமில்லாத ஆண்டைகள். இதில் எங்கே சிவப்பு பந்தில் கெய்க்வாட் அதுவும் புஜாராவுக்கு ப்ச் வாய்ப்பில்லை!

Richards